3188.அளிஇனம் கடம்தொறும்
     ஆர்ப்ப, ஆய் கதிர்
ஒளி பட உணர்ந்தில,
     உறங்குகின்றன;
தெளிவுஇல இன் துயில்
     விளையும் சேக்கையுள்
களிகளை நிகர்த்தன, களி
     நல் யானையே.

    அளி இனம் - வண்டுகளின் கூட்டம்; கடம் தொறும் ஆர்ப்ப -
கன்னங்களில் பொழியும் மதநீரில் மொய்த்து ஆரவாரிக்கவும்; ஆய் கதிர்
ஒளிபட -
வெளிச்சத்தால் சிறந்த சூரிய ஒளி பாயவும்; உணர்ந்தில
உறங்குகின்றன -
விழிப்புறாமல் உறங்குகின்றனவான; களி நல் யானை -
மதங்கொண்ட உயர்ந்த யானைகள்; இன்துயில் விளையும் சேக்கையுள் -
இனிய உறக்கம் தரும் படுக்கையில்; தெளிவு இல - தூக்கம் தெளியாமல்
உறங்கும்; களிகளை நிகர்த்தன - கட்குடியர்களைப் போல விளங்கின;
ஏ-
ஈற்றசை.

     திடீரென விடிந்தமையின் விளைவாய் யானைகளும்துயிலெழாதிருந்தன.
களி(ப்பு)கள் உண்பதால் வரும் போதை.கட்குடியர்களை உயர்திணையாகக்
கருதுதலும் பொருந்தாது என்பார் போல்களிகள் என அஃறிணையில்
சுட்டினார்.                                                   122