3246.'திறத் திறனாலே, செய் தவம்
     முற்றித் திரு உற்றாய்,
மறத் திறனாலோ? சொல்லுதி-சொல்
     ஆய் மறை வல்லோய்!
அறத் திறனாலே எய்தினை அன்றோ?
     அது, நீயும்
புறத் திறனாலே பின்னும்
     இழக்கப் புகுவாயோ?

    'சொல் ஆய் மறை வல்லோய் - ஆய்ந்தெடுத்த சொற்களால்
உருவான வேதங்களில் பயிற்சி உடையவனே; திறத்திறனாலே - அறநெறி
நின்று; செய்தவம் முற்றி - கடுந்தவம் நிறைவுற்று; திரு உற்றாய் - செல்வ
வளம் எய்தினாய்; மறத்திறனாலோ சொல்லுதி - (அன்றி) அதரும
நெறியினாலோ அவை உனக்குக் கிடைத்தன என்று எண்ணிக் கூறுவாயாக;
அறத்திறனாலே - நல்லற வழியினாலே; எய்தினை அன்றோ -
அனைத்து நலமும் பெற்றாய் அல்லவா; பின்னும் - மீண்டும்;
புறத்திறனாலே - அறத்திற்குப் புறம்பான வழியிலே; அது நீயும் - அச்
செல்வத்தை நீ தான்; இழக்கப் புகுவாயோ? - தொலைக்கும் வழியில்
செல்லுவாயோ.

     நீயும் - உயர்வு சிறப்பு உம்மை.                            10