| 3262. | 'வேதனை செய் காம விடம்       மேலிட மெலிந்தாய்;   தீது உரைசெய்தாய்; இனைய செய்கை       சிதைவு அன்றோ?   மாதுலனும் ஆய், மரபின் முந்தை       உற வந்தேன்,   ஈது உரை செய்தேன்; அதனை, எந்தை!       தவிர்க' என்றான். |  
     வேதனை செய் காம விடம் - துயரம் தருகின்ற காமம் என்ற நஞ்சு; மேலிட மெலிந்தாய் - மிகுதிப்படச் சோர்வுற்றாய்; தீது உரை செய்தாய் - கொடுஞ் சொற்களையும் கூறினாய்; இனைய செய்கை சிதைவு அன்றோ - இவ்வாறு செய்தல் அழிவு ஆகுமன்றோ?; மாதுலனும் ஆய் - உனக்கு மாமன் உறவுடையவனாய்; மரபின் முந்தை உற வந்தேன் - உன் குலத்தில் முந்திப் பிறந்தவனானேன்; ஈது உரை செய்தேன் - இம்மொழிகளை உனக்குச் சொன்னேன்; எந்தை - என ஐயா; அதனைத் தவிர்க - இத்தீய கருத்தை விட்டு விடுக; என்றான் - என (மாரீசன் இராவணனுக்கு மறுபடியும் அறிவுரை பகன்றான்.      உன் குலத்து முந்தியவன் என்பதால் நீ என்னைக் கடிந்த போதும் நல்லன கூறினேன் என அறிவுரை கூறினான் மாரீசன். மாதாவின் உடன் பிறப்பு மாதுலன்.                                             26  |