| 3264. | 'திக்கயம் ஒளிப்ப, நிலை தேவர் கெட, வானம் புக்கு, அவர் இருக்கை புகைவித்து, உலகம் யாவும் சக்கரம் நடத்தும் எனையோ, தயரதன் தன் மக்கள் நலிகிற்பர்? இது நன்று வலி அன்றோ? |
'திக்கயம் ஒளிப்ப - திசை யானைகள் ஓடி ஒளிந்து கொள்ளவும்; தேவர்நிலை கெட - தேவர் தங்கள் பெருமை அழியவும்; வானம் புக்கு - விண்ணுலகை நண்ணி; அவர் இருக்கை புகைவித்து - அவர்களின் மாட மாளிகைகளை நெருப்புக்கு இரையாக்கி; உலகம் யாவும் - அனைத்துலகங்களிலும்; சக்கரம் நடத்தும் - ஆணைச் சக்கரம் செலுத்தும்; எனையோ - (நிகரற்ற) என்னையோ; தயரதன் தன் மக்கள் நலிகிற்பர் - தசரதன் புதல்வரான இராமலக்குவர் அழிக்க வல்லார்?; வலி இது நன்று அன்றோ - இந்த ஆற்றலும் நன்று நன்று (என்றான்) ஏளனம் தோன்றும்படி தன் வலிமையோடு இராமலக்குவர் வலிமையை ஒப்பிட்டுக் காட்டிப் பேசினான் இராவணன். நன்று நன்று என்ற அடுக்கு ஏளனம் குறித்தது. 28 |