மாரீசன் உடன்படல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3267. அரக்கன் அஃது உரைத்தலோடும், அறிந்தனன்
     அடங்கி, ' "நெஞ்சம்
தருக்கினர் கெடுவர்" என்றல் தத்துவ
     நிலையிற்று அன்றோ?
"செருக்குநர்த் தீர்த்தும்" என்பார்தம்மின
    ஆர் செருக்கர்?' என்னா,
உருக்கிய செம்பின் உற்ற நீர்
     என, உரைக்கலுற்றான்:

    அரக்கன் அஃது உரைத்தலோடும் - இராவணன் அவ்வாறு
கூறியதும்; அறிந்தனன் அடங்கி - இராவணன் மனப்போக்கை
அறிந்தவனாய் அடக்கம் மேற்கொண்டு; 'நெஞ்சம் தருக்கினர் கெடுவர்'
என்றல் -
மனச் செருக்குக் கொண்டவர்கள் அழிவார்கள் என்பது; தத்துவ
நிலையிற்று அன்றோ -
ஆழ்ந்த தத்துவ நிலையுடையது அல்லவா?
(மேலும்); "செருக்குநர்த் தீர்த்தும்" என்பார் தம்மின் - செருக்கு
உற்றவர்களை அழித்துவிடுவோம் என்று கருதுவோரைவிட; ஆர் செருக்கர்
-
மிகுந்த செருக்கு உடையவர்கள் யார்?; என்னா - என்று மனத்துள்
நினைத்து; உருக்கிய செம்பின் உற்ற நீர் என - உருக்கப்பட்ட செம்பின்
மீது பட்ட தண்ணீர்த்துளி வற்றுதல் போல; (வேகம் குன்றி);
உரைக்கலுற்றான் - மாரீசன் பேசலுற்றான்.

     தருக்குற்றார் அழிவர். தருக்குற்றவனைத் திருத்துதலும் பேதைமை
என உணர்ந்து மாரீசன் அடங்கினான். மாரீசனின் உணர்வு முற்றும்
அடங்கினமைக்கு உருக்கிய செம்பின் உற்ற நீர் உவமை.31