3278. | அக் காலமும், வேள்வியின், அன்று தொடர்ந்து இக் காலும், நலிந்தும் ஓர் ஈறு பெறான்; முக் காலின் முடிந்திடுவான் முயல்வான் புக்கான், அவ் இராகவன் வைகு புனம். |
வேள்வியின் அன்று - (விசுவாமித்திரர் செய்த) யாகம் நிகழ்ந்த போதும்; அக்காலமும் - தண்ட காரண்யத்தில் மானாகச் சென்ற அப்போதும்; நலிந்தும் - துன்புற நேர்ந்தும்; தொடர்ந்து இக்காலும் - இன்று வரை தொடர்ச்சியாக; ஓர் ஈறு பெறான் - ஒரு முடிவையோ மரணத்தையோ பெறாத (மாரீசன்); முக்காலின் - இப்போது மூன்றாம் முறையாக; முடிந்திடுவான் முயல்வான் - மரணமுற இசைந்து அதன் வழியே செல்கின்றவனாய்; அவ் இராகவன் வைகு புனம் - அந்த இராமபிரான் தங்கியுள்ள வனம் நோக்கி; புக்கான் - சென்றடைந்தான். மூன்றாம் முறை மரணம் உறுதியென அறிந்து அதனைச் சந்திக்க சென்றான் மாரீசன். 42 |