3318. | 'மாள்வதே பொருள் ஆக வந்தான்அலன்; சூழ்வது ஓர் பொருள் உண்டு; இவன் சொல்லினால் மூள்வது ஏதம்; அது முடியாமுனம் மீள்வதே நலன்' என்று, அவன் மீண்டனன். |
(எனினும்); 'மாள்வதே பொருள் ஆக - சாவதே நோக்கமாக; வந்தான் அலன் - மாரீசன் வந்தவனாகத் தோன்றவில்லை; சூழ்வது ஓர் பொருள் உண்டு - இவன் திட்டமிட்ட ஒரு நோக்குடன் வந்துள்ளான்; இவன் சொல்லினால் - இவன் கூக்குரலால்; மூள்வது ஏதம் - தீங்கு நிகழ உள்ளது; அது முடியா முனம் - அத் தீங்கு நிறைவேறுவதன் முன்னே; மீள்வதே நலன் - திரும்பப் பர்ண சாலையை அடைவதே நலம் பயக்கும்;" என்று அவன் மீண்டனன் - என்று எண்ணித் திரும்பி வரலானான். இப்படலத்தில் அரக்கர் மாயைக்கு அவதார நாயகர்களும் இலக்காவதும், உயர் குடிப் பெண்ணாயினும் தயக்க மயக்கங்களுக்கு இரையாவதும், நுட்ப அறிவுடையார் எத்தீமையையும் முன்கூட்டி அறிவர் என்பதும் வெளிப்படுத்தப்படுதலைக் காண்கிறோம். 82 |