3406.யானையும், யாளியும்,
     முதல யாவையும்,
கான் நெடு மரத்தொடு
     தூறு கல் இவை
மேல் நிமிர்ந்து, இரு சிறை
     விசையின் ஏறலால்,
வானமும் கானமும்
     மாறு கொள்ளவே.

    யானையும் யாளியும் முதல யாவையும் - யானைகளும்
யாளிகளும் முதலாகிய எல்லா மிருகங்களும்; கான் நெடு மரத்தொடு-
காட்டில் உள்ள மரங்களும்; தூறு கல் இவை - புதர்களும்கற்களும்
ஆகிய இவையும்; இரு சிறை விசையின் மேல் நிமிர்ந்து
ஏறலால் -
இரண்டு சிறகுகள் வீசும் காற்றின் (வேகத்தால்) (நிலை
கெட்டு) மேல் ஏறி வானத்தில் நிரம்புதலால்; வானமும் கானமும்
மாறுகொள்ளவே -
ஆகாயமும் காடுகளும் ஒன்றொடு ஒன்று மாறாடி
நிற்கவும்... வந்தனன்"

     யானை யாளி முதலிய மிருகங்களும் காட்டில் உள்ளமரங்களும்,
புதர்களும், கற்களும் சடாயுவின் இரு சிறகுகள் வீசும்காற்றின் வேகத்தால்
நிலை கெட்டு ஆகாயமும் காடுகளும் ஒன்றொடுஒன்று மாறு கொண்டு
நின்றன என்றவாறு. தூறு - புதர், முதல -குறிப்புப் பெயரெச்சம்.       4