3477. | நீல மேனி அந் நெடியவன் மன நிலை திரிய, மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும் காலம் ஆம் என, கடையிடு கணிக்க அரும் பொருள்கள் மேல கீழுற, கீழன மேலுறும் வேலை, |
கடையிடு - (முழுதுமாக) முடிவைக் கொண்ட; கணிக்க அரும் பொருள்கள் - கணக்கிடுவதற்கு முடியாத பொருள்கள்; நீலமேனி அந் நெடியவன் - நீலத்திரு மேனியை உடைய அந்தப் பெரியவனாகிய இராமனது; மனநிலை திரிய - மனநிலை மாறியதனால்; மூல காரணத் தவனொடும் உலகெலாம் முற்றும் காலம் ஆம் என - உலகிற்கு மூல காரண ஆகிய இறைவனோடு உலகம் முழுவதும் அழியும் காலம் இது ஆகும் என்று கருதும்படி; மேல கீழுற கீழன மேலுறும் வேலை - மேலுள்ளவை யெல்லாம் கீழாக கீழாக உள்ளவை எல்லாம் மேலாக நிலை தடுமாறும் பொழுது, (அடுத்த பாடலில் தொடரும்). காரணத்தவனொடு - காரணத்தவனிடத்தில்; வேற்றுமை மயக்கம். 75 |