3618.பேர்ந்தான், நெடு
     மாயையினில் பிரியா;
ஈர்ந்தான், அவள் நாசி
     பிடித்து, இளையோன்;
சோர்ந்தாள் இடு பூசல்
     செவித் துளையில்
சேர்ந்து ஆர்தலுமே,
     திருமால் தெருளா,

     இளையோன் - இளையவனாகிய இலக்குவன்;
நெடுமாயையினில் பேர்ந்தான் - (அயோமுகியின்) மிக்க மோகனை
என்ற மாயையில் இருந்து நீங்கினான்; பிரியா - அவ்வாறு நீங்கி;
அவள் நாசி பிடித்து ஈர்ந்தான் - அவளது மூக்கைப் பிடித்து
அறுத்தான்; சோர்ந்தாள் - (அவ்வாறு உறுப்பு அறுப்பு உண்டதனால்)
தளர்ந்தவள் ஆகிய (அந்த அரக்கி); இடுபூசல் - எழுப்பிய பேரொலி;
செவித் துளையில் சேர்ந்து ஆர்தலுமே - காதுகளில் பட்டு ஒலித்த
உடனே; திருமால் தெருளா - இராமன் (கலக்கம் நீங்கி) மனம் தேறி
(எண்பதாம் பாடலில் முடியும்).

     மோகனை மாயையில் இருந்து நீங்கிய இலக்குவன்,அயோமுகியின்
மூக்கைப் பிடித்து அறுத்தான். தன் உறுப்புஅறுப்புண்டதனால் தளர்ந்து
அவள் எழுப்பிய பேரொலி இராமனின்காதுகளில் பட்டது. பேர்தல் -
நீங்குதல். ஈர்தல் - அறுத்தல், சோர்தல்- தளர்தல், தெருளா - இலக்குவன்
தன்னைச் சந்தித்துத் துயர்விளைவித்தவரை வென்று விட்டான் என்று
தெளிந்தது.                                                  78