3640.'அப்புடை அலங்கு மீன்
     அலர்ந்ததாம் என -
உப்புடை இந்து என்று
     உதித்த ஊழித் தீ,
வெப்புடை விரி கதிர்
     வெதுப்ப - மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ,
     கொதிக்கும் வானமே?'

    'உப்புடை இந்து என்று - அழகு உடைய நிலவு என்று;
உதித்த ஊழித் தீ - (வானத்தில் உதித்த) ஊழித் தீயினுடைய;
வெப்புடை விரிகதிர் வெதுப்ப - வெபபம் உடைய விரிந்த கதிர்கள்
சுட; மெய் எலாம் - (தன்) உடம்பில் எல்லாம்; அப்புடை அலங்கு
மீன் -
நீரோட்டம் உடைய விளங்குகிற மீன்கள்; அலர்ந்ததாம் என
-
விளங்கினதாம் என்பது; கொதிக்கும் வானம் - (இந்து எனும்
ஊழித் தீயினால்) கொதிக்கின்ற வானம்; கொப்புளம் பொடித்ததோ -
கொப்புளங் கொண்டதோ? எனுமாறு விளங்கியது'.

     இந்து என்கிற ஊழித் தீயினால் வெப்பமடைந்த வானம்
கொப்புளம் கொண்டது போல் அதில் மீன்கள் விளங்கின என்றவாறு.
அப்பு - நீர், உப்பு - இனிமை, அழகு. இந்து - நிலவு. அலங்குதல் -
விளங்குதல்.                                                100