3660. | ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான்; ஆலமே என இரண்டு அழன்ற ஆக்கையான்; நீல மால், நேமியான் தலையை நீக்கிய காலநேமியைப் பொரும் கவந்தக் காட்சியான். |
ஓலம் ஆர் கடல் என - ஆரவாரம் பொருந்திய கடல் போல; முழங்கும் ஓதையான் - முழக்கம் செய்யும் ஓசை எழுப்புவோனாய்; ஆலமே என - ஆலகால நஞ்சு எனும்படியான; இரண்டு அழன்ற ஆக்கையான் - கறுத்து எரிகின்ற உடம்பினை உடையவன்அக்கவந்தன்; நீல மால் - நீல நிறத்தவனாகிய திருமால்; நேமியான்- தன் சக்கரப் படையால்; தலையை நீக்கிய - தலை அரியப்பெற்ற;கால நேமியைப் பொரும் - காலநேமி என்ற அரக்கனைப் போல்;கவந்தக் காட்சியான் - தலையற்ற உடல் தோற்றம் கொண்டவன்,அக் கவந்தன். ஆலகாலம் நிறத்திற்கும் உயிர் வாங்கும் கொடுமைக்கும்உவமை; உருவம் பண்பு இரண்டாலும் பொதுத்தன்மை கொண்டது.காலநேமி என்பான் இரணியனின் ஒரு மகன்; நூறுதலைகளும் நூறுகரங்களும் கொண்டவன். திருமால் தன் சக்கராயுதத்தால் அவன் நூறுதலைகளையும் அரிந்தான் என்பதொரு கதை. தலைகளை இழந்தபின்னும் கால நேமியின் உடல் போர்த்திறம் இழவாமல் பொருததுஎன்பது புராணச் செய்தி. அதுபோலவே, தலை எனத் தனி ஓர் உறுப்புஇலாதவனாகிய கவந்தனும் எதிர்த்துப் பொருகின்ற திறமுடையான்என்பது உவமையின் நுட்பம். 18 |