315. உலகு தங்கிய பல தொல்
      உயிர்கள் உயர்ந்திடு பரிசில்
இலகும் இங்கிதம் உடையர்;
      இசையின் இன்புறு சுருதி
அலகு இல் விஞ்சைகள் உடையர்;
      அகிலமும் தொழு கழலர்;
விலகு திண் கொடு வினைகள்
      வெகுளிகொண்டு அடு விறலர்.

     இங்கிதம் - குறிப்பு; விஞ்சைகள் - வித்தைகள்               8-1