முகப்பு
தொடக்கம்
316.
சிவனும் அம்புய மலரில்
அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி
எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு
தொடரு செங்கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன்
உலகில் வந்ததுகொல் என.
அம்புய மலர்
- தாமரை மலர்;
இந்திரை
- திருமகள்;
கொழுநன்
-
கணவன். 8-2
மேல்