326. | 'நீலகண்டனும், நேமியும், குலிசனும், மலரின்- மேல் உளானும், வந்து, அவன் உயிர்க்கு உதவினும், வீட்டி ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென்; அனலோன் சாலும், இன்று எனது உரைக்கு அருஞ்சான்று' எனச் சமைந்தான். |
நீலகண்டன் - சிவபிரான்; நேமி - திருமால்; குலிசன் - (வச்சிரப் படையான்)இந்திரன். 71-1 |