5. துந்துபிப் படலம்

328.புயலும் வானகமும், அப்
      புணரியும், புணரி சூழ்
அயலும் வீழ் தூளியால்
      அறிவு அருந்தகையவாம்
மயனின் மாமகனும் வாலியும்
      மறத்து உடலினார்.
இயலும் மா மதியம் ஈர்
      ஆறும் வந்து எய்தவே.'

     புயல் - மேகம்; புணரி - கடல்.                            9-1