342. அன்னை போன பின், அங்கதக் காளையை,
தன்னை நேர் இல் அச் சமீரணன் காதலன்,
'இன்னம் நீ சென்று, இருந் துயில் நீக்கு' என,
மன்னன் வைகு இடத்து ஏகினன், மாசு இலான்.

     அன்னை - தாயாகிய தாரை; மாசு இலான் - குற்றம் இல்லாத
அங்கதன்.                                                   77-1