11.  தானை காண் படலம்

344. அன்று அவண் வானரச் சேனை யாவையும்,
வென்றி கொள் தலைவரும், எண்கின் வீரரும்,
குன்றுகள் ஒரு வழிக் கூடினாலென,
வன் திறல் இராமனை வாழ்த்தி, வந்தவே.

     எண்கின் வீரர் - கரடி வீரர்கள்.                          1-1