346.'தாமரை பெருந் தவிசு
      உறை சதுமுகக் கடவுள்
ஓம அடஙகியில் உதித்தன,
      உலப்பு இல கோடி
ஆம்' எனப் புகல் வானரத்
      தானை அங்கு அணித்தா, -
மா வயப் புயத்து எறுழ் வலி
      மயிந்தன் - வந்து அடைந்தான்.

     தவிசு - இருக்கை (ஆசனம்); சதுமுகக் கடவுள் - நான்கு முகங்
கொண்ட பிரமதேவன்; ஓம அங்கி - வேள்வித் தீ; தனை - சேனை. 1-3