356.வச்சிரமுடைக் குரிசில் வாள்
      அமரின் மேல் நாள்,
மெச்சு அவுணர்
      யாவரும் விளிந்தனர்களாக,
அச்சம் உறு தானவர்கள்
      கம்மியனும் அஞ்சி,
வைச்ச பிலமூடிதன் மறைந்து
      அயல் இருந்தான்.

     வச்சிரமுடைக் குரிசில் - இந்திரன்; தானவர் தச்சன் - அசுரத்
தச்சனானமயன்.                                              57-1