369. தாழந்த மா தவத்து
      உலோகசாரங்கன் உறையும் சாரல்
வீழ்ந்தனென்; சிறைகள் தீய,
      வெவ்வுயிர்த்து, உளமும் மெய்யும்
போழ்ந்தன துன்பம் ஊன்ற,
      உயிர்ப்பொறை போற்றகில்லாது,
ஆழ்ந்தனென்; ஆழ்ந்த என்னை அருந்
      தவன் எதிர்ந்து தேற்றி;

     போழ்ந்தன துன்பம் - பிளப்பனவாகிய துன்பம்; உயிர்ப்பொறை -
உயிர்ச்சுமை.                                                56-1