373.'   ''தசரத ராமன் தேவர் தவத்தினால்,
      தாய் சொல் தாங்கி,
கச ரத துரகம் இன்றிக்
      கானிடை இறுத்த காலை,
வசை தரும் இலங்கை வேந்தன்
      வவ்விய திருவை நாடித்
திசை திரி கவிகள் உற்றால்,
      சிறகு பெற்று எழுதி'' என்ன,

     கச, ரத, துரகம் - யானை, தேர், குதிரை; கவிகள் - குரங்குகள் 56-5