16. மயேந்திரப் படலம் 378. | புள்ளரசு இன்ன வாய்மை சொல்லி விண் போந்த பின்னர், தெள்ளிதின் உணர்ந்தார் யாரும்; அங்கு அது சாம்பன் சிந்தித்து, உள்ளவர் தன்னில் வல்லார் யார் என உன்னி, யாண்டும் தள்ளரும் புகழோன் வாயுத் தனையனை நோக்கிச் செப்பும்: |
புள்ளரசு - பறவைகளுக்கு அரசனான சம்பாதி; வாயுத் தனையன் - வாயுவின் மகனாகிய அனுமன். |