3890. | 'கடிது சென்று, அவனும், அக் கடவுள்தன் கயிலையைக் கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும், குறுகி, ''முன் நொடுதி; நின் குறை என்?'' என்றலும், நுவன்றனன்அரோ, ''முடிவுஇல் வெஞ்செரு, எனக்கு அருள் செய்வான் முயல்க!'' எனா, |
அவனும் கடிது சென்று - அந்த அரக்கனும் விரைந்து சென்று; அக்கடவுள் தன் கயிலையைக் - அந்தச் சிவபிரானின் கைலை மலையை; கொடிய கொம்பினின் - தன் கொடிய கொம்புகளால்; மடுத்து எழுதலும் - முட்டிப் பாய்ந்து எழுகையில்; முன் குறுகி - (சிவபிரான்) அவன் எதிரில் வந்து; நின் குறை என் - ''உனக்கு வேண்டுவது என்ன?நொடிதி - சொல்வாய்''; என்றலும் - என்று கேட்டதும்; எனக்கு - (துந்துபி) 'எனக்கு; முடிவுஇல் வெஞ் செரு - முடிவு இல்லாத கொடிய போரினை; அருள் செய்வான் முயல்க - அளிக்க முயல்வாயாக; எனா நுவன்றனன் - என்று சொன்னான். 'என்னோடு இடைவிடாது போர் செய்ய வேண்டும்'. என்று துந்துபி தான் வந்த காரணத்தைச் சிவபிரானிடம் அறிவித்தான். 5 |