4299.'தேவி நீங்க, அத் தேவரின் சீரியொன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்
; அது
பாவியாது, பருகுதிர் போலும், நும்
காவி நாள்மலர்க் கண்ணியர் காதல் நீர்.

     தேவி நீங்க - (தன்) மனைவியான சீதை பிரிந்திருக்க; அத் தேவ ரின்
சீரியோன் -
(அத்துயரத்தால்) தேவர்களைக் காட்டிலும் சிறப்புள்ளவனான
அந்த இராமன்; ஆவி நீங்கினன் போல் அயர்வான் - உயிர் நீங்கியவன்
போலத் தளர்ந்துள்ளான்; அது பாவியாது  - அதை (நீங்கள்) மனத்தில்
கருதிப் பார்க்காமல்; நும் நாள் காவி மலர்க் கண்ணியர் - காலை பூத்த
கருங் குவளை போன்ற கண்களையுடைய உங்கள் மனைவியரின்; காதல் நீர்
-
அன்பு வழிப்பட்ட இன்பத் தேனை; பருகுதிர் போலும் - குடித்து
மகிழ்கின்றீர் போலும்!

     சிற்றின்ப வயப்பட்டுக் கடமையை மறந்த சுக்கிரீவனது செயலை
மனத்திற் கொண்டு தாரை இவ்வாறு பேசலானாள் என்பது.                  31