4300.'திறம்பினீர் மெய்;
      சிதைத்தீர் உதவியை;
நிறம் பொலீர்; உங்கள்
      தீவினை நேர்ந்ததால்,
மறம் செய்வான் உறின்,
      மாளுதிர்; மற்று இனிப்
புறஞ்செய்து ஆவது என்?'
      என்கின்ற போதின்வாய்,

     மெய் திறம்பினீர் - சத்தியம் தவறிவிட்டீர்கள்; உதவியைச் சிதைத்
தீர்-
(இராமன் செய்த) உதவியை மறந்தீர்கள்; நிறம் பொலீர் - குணத்தால்
பொல்லாதவர்கள் ஆனீர்கள்; உங்கள் தீவினை நேர்ந்ததால் - உங்களது
பாவச் செயல் பயன்தர வந்ததால்; மறம் செய்வான் உறின் - (அந்த வீரர்
உம்மை எதிர்த்துப்) போர் செய்யத் தொடங்கினால்; மாளுதிர் - (அவரால்)
மடிவீர்கள்; இனிப் புறம் செய்து - இனி மேற்கொண்டு என்ன செய்தும்;
ஆவது என் -
அதனால் விளையக் கூடிய பயன் யாது; என்கின்ற போதின்
வாய் -
என்று (அங்கதன் முதலோரைத் தாரை) கண்டித்துப் பேசும்
சமயத்தில். . . .

     நிறம் பொல்லீர் (பொலீர்); நிறம் - குணம். திறம்புதல்: மாறுபடுதல். 32