4462. | 'தாங்கும் ஆர் அகில், தண் நறுஞ் சந்தனம், வீங்கு வேலி விதர்ப்பமும், மெல்லென நீங்கி, நாடு நெடியன பிற்பட, தேங்குவார் புனல் தண்டகம் சேர்திரால். |
தாங்கும் - நறுமணத்தைக் கொண்ட; ஆர் அகில் - ஆத்தியும் அகில் மரங்களும்; தண் நறுஞ் சந்தனம் - குளிர்ந்த நறுமணமுள்ள சந் தனமரங்களும் (ஆகியவற்றை); வீங்கு வேலி - விரிந்த வேலியாகக் கொண்ட; விதர்ப்பமும் - விதர்ப்ப நாட்டையும்; மெல்லென நீங்கி - மெதுவாகக் கடந்து; நெடியன நாடு பிற்பட - பல காதம் நீண்ட பல நாடுகளும் உங்களுக்குப் பின்னாகுமாறு; தேங்கு வார்புனல் - மிக்க நீர் நிறைந்து; தண்டகம் சேர்திர் - தண்டகாரணியத்தைச் சென்று அடைவீர். விதர்ப்ப நாட்டைச் சுற்றி வேலியாக அகில் மரங்களும், சந்தன மரங்களும் நிறைந்திருக்குமென்பது, தேங்குதல் - நிறைதல். 16 |