4533. பறவையும், பல் வகை
      விலங்கும், பாடு அமைந்து
உறைவன, கனக நுண்
     தூறி ஒற்றலான்,
நிறை நெடு மேருவைச்
      சேர்ந்த நீர ஆய்,
பொறை நெடும் பொன்
      ஒளி மிளிரும் பொற்பது.

     பாடு அமைந்து உறைவன - (அம் மலையானது) தன்னிடம் வந்து
வாழுகின்ற; பறவையும் - பறவைகளும்; பல்வகை விலங்கும் - பல
வகையான மிருகங்களும்; கனக நுண் தூளி ஒற்றலால் - (அம் மலை
யிலுள்ள) நுட்பமான பொன் துகள்கள் ஒட்டிக் கொள்வதால்; நிறை நெடு
மேருவை -
நிறைந்து ஓங்கியுள்ள பெரிய மேரு மலையை; சேர்ந்த நீர்
ஆய்-
சேர்ந்த தன்மையுடையன என்று சொல்லுமாறு; பொறை
நெடும்பொன் ஒளி-
வலிமை மிக்க பொன்னின் ஒளியை; மிளிரும்
பொற்பது -
(எல்லாப்பொருள்களின் மேலும்) பெய்கின்ற பொலிவுடையது.

     தன்னிடம் வாழும் பறவைகளும் விலங்குகளும் மேருவைச் சார்ந்த
பொருள்கள்போலப் பொன்துளை படியப்பெற்று விளங்குமாறு அப் பொருள்கள்
எல்லாவற்றையும் பொன்மயமாகச் செய்வது ஏமகூடமலை என்பது. 'பனிமால்
இமயப் பொருப்பகம் சேர்ந்த பொல்லாக் கருங்காக்கையும் பொன்னிறமாய்
இருக்கும்' என்ற காரிகைத் தொடர் ஒப்பு நோக்கத் தக்கது. (யாப். காரிகை. 3)
கனகம் : பொன்.                                                13