சுயம்பிரபையின் வினாவும் வானரர் விடையும்

4572.அன்ன பொழுதின்கண் அவ்
     அணங்கும், அறிவுற்றாள்;
முன், அனையர் சேறல் முறை
      அன்று, என முனிந்தாள்;
'துன்ன அரிய பொன்
      நகரியின் உறைவிர்அல்லீர்;
என்ன வரவு? யாவர்?
     உரைசெய்க!' என இசைத்தான்.

     அன்ன பொழுதின்கண் - அச் சமயத்தில்; அவ்அணங்கும் - அந்தச்
சுயம்பிரபையும்; அறிவுற்றாள் - (யோக நிலையிலிருந்து நீங்கித்) தன் நினைவு
வரப்பெற்றாள் (அவர்களைப் பார்த்து); அனையர்  - தனக்கு எதிரில்
அவர்கள்; சேறல் முறை அன்று என - வருவது தகாது என்று;  முன்
முனிந்தாள் -
உணர்ச்சி உற்றவுடன் முதலில் கோபங்கொண்டு; துன்ன அறிய
-
(நீங்கள்) எவரும் அணுக முடியாத; பொன் நகரியின் உறைவிர் அல்லீர் -
பொன்மயமான இந்த நகரத்தில் வாழ்வதற்கு உரியவராக இல்லை; வரவு
என்ன -
(நீங்கள்) இங்கு வரக் காரணம் என்ன; யாவர் - (நீங்கள்) யாவர்?
உரை செய்க என - சொல்லுங்கள் என்று; இசைத்தாள் - கேட்டாள்.

     தவம் செய்யும் பெண்ணாகிய தன்னெதிரில் ஆடவர் பலர் வந்ததால்
சுயம்பிரபை கோபித்தாள் என்பது.  அறிவுற்றாள்: தன் உணர்வு வரப்பெற்றாள்.
                                                            52