4638. | சேட்டு இளங் கடுவன் சிறு புன் கையில் கோட்ட தேம் பலவின் கனி கூன்சுளை, தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு தேன் ஈட்டம் என்ன சென்று, ஈஇனம் மொய்ப்பன. |
சேட்டு இளங் கடுவன் - மிக இளமையான ஆண்குரங்கின்; சிறு புன் கையில் - மிகச் சிறிய கையிலேயுள்ள; கோட்ட - கிளைகளிலுண்டான; தேம் பலவின் கனி - இனிய பலாப் பழத்தின்; கூன் சுளை - வளைந்த சுளைகளிலே; தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு - இதழ்களையுடைய மலர்கள் நிறைந்த சோலைகளில் மொய்க்கும்; தேன் ஈட்டம் என்ன - வண்டுகளின் கூட்டம் போல; ஈ இனம் சென்று மொய்ப்பன - ஈக்களின் கூட்டம் மொய்த்துக் கொள்ளும். ஆண்குரங்குகளின் கையிலேயுள்ள பலாச் சுளையில் ஈக்கள் மொய்ப்பதற்குச் சோலைகளிலுள்ள மலர்களில் வண்டுகள் மொய்த்ததை உவமை கூறினார். சேட்டிளம், சிறுபுன் - ஒருபொருட் பன்மொழிகள். (சேடு + இளம் - சேட்டிளம். தோடு + அமைந்த - தோட்டமைந்த). 45 |