கலிவிருத்தம் 4664. | 'நீயும் நின் தாதையும் நீங்க, நின் குலத் தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால்; ஆயது கருதினம்; அன்னது அன்று எனின், நாயகர் இறுதியும் நவிலற்பாலதோ? |
நீயும் நின் தாதையும் நீங்க - நீயும் உன் தந்தையான சுக்கிரீவனும் தவிர; நின்குலத் தாயம் வந்தவரொடும் - உன் குலத்தில் உரிமையுடை யவராய்ப் பிறந்தவர்க்கு; தனையர் இல்லை - வேறு ஒரு மகன் இல்லை; ஆயது கருதினம் - (அது கருதியே) நீ உயிர் நீங்காது சுக்கிரீவனைச் சேர்க என்று கூறினோம்; அன்னது அன்று எனில் - அவ்வாறு இல்லாவிட்டாலும்; நாயகர் இறுதியும் - (நம்) தலைவர்களின் மரணமும்; நவிலற் பாலதோ - (நாம்) பேசத் தக்கது ஆகுமோ? (தகாது). உங்கள் அரச மரபில் இப்போது வேறு புதல்வர் இல்லாததாலும், எங்களைப் போன்ற எளியவரது மரணமின்றி உங்களைப் போன்ற இளவரசர் மரணம் குறித்து வாயினாற் சொல்லுதலும் கூடாதாதலாலும் நீ உயிர்விடுவேன் என்று கூறுவது சிறிதும் தகாது; ஆதலால் நாங்களெல்லாரும் உயிர் நீங்க, நீ சுக்கிரீவனைச் சென்ற சேர்வாய் என்பது. தாயம்: சொத்திலுள்ளஉரிமை. 17 |