385.

பெருஞ் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி
                         அரக்கர் யாரும்
பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட
                         மிதித்தலோடும்
அருஞ் சினம்அடங்கி, தம்தம் மாதரைத் தழுவி,
                         அங்கம்
நெரிஞ்சுற,கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம்
                         நுங்க

     அனுமன் திருவடி ஊன்றநிலை குலைந்த அரக்கர் தம்மாதரைத்
தழுவிக்கடலில் விழுந்தனர். பொதுத்திட - துளை உண்டாக. நுங்க - உண்ண.
நெரிஞ்சுற - சிதைவுற.                                        (7-1)