'எள்ளற்கு அரிய நிலை ஆகி, இயைந்து தம்மில் இணை உர ஆய் தள்ளப்படாத தகைஆகி, சார் கத்திரிகை வகை ஒழுகா, அள்ளற் பள்ளத்துஅகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற வள்ளைத் தண்டின்வனப்பு அழித்த, மகரம் செறியாக்குழை' என்றான்
குண்டலம்அணியாச் செவிகளின் உவமை - கத்திரிக்கோலின் காது,வள்ளைத் தண்டு. (49-1)