461.

என்றலும்,ஏவலுக்கு உரியர் ஓடியே
சென்று, மற்றுஅவன் அடி பணிந்து, தீமை வந்து
ஒன்றியதிறங்களும் உரைத்து, 'நுந்தையும்
இன்று உனைக்கூவினன்' எனவும் சொல்லினார்.

     ஏவலர் -இந்திரசித்தை அழைத்தபடி.                   (49-2)