என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை கூப்பி, 'புன் தொழில்குரங்கு எனாது என் தோளிடைப் புகுது' என்னா, தன் தலை படியில்தாழ்ந்தான்; அண்ணலும், சரணம் வைத்தான்; வன் திறல் வாலிசேயும் இளவலை வணங்கிச் சொன்னான்;
இராமன் அனுமன் மேல்வீற்றிருத்தல். (49-2)