மிகைப் பாடல்கள்
1. கடல் தாவு படலம்
சென்றனன்,இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி- திண் தோள் வன் திறல்அனுமன்-வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி, பொன் திணிசிகர கோடி மயேந்திரப் பொருப்பின் ஏறி, நின்றிடும்தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ ?
அனுமன்இராமபிரானின் திருவடியை மனத்திலே தியானித்து கடலைக்கடக்க எண்ணி மகேந்திர மலையில் நிற்கும் தன்மை எம்மால் கூறும் தன்மைஉடையதோ.