387.

பரவுக் குரல், பணிலக் குரல், பணையின் குரல்,
                           பறையின்
விரவுக் குரல்,சுருதிக் குரல், விசயக் குரல், விரவா,
அரவக் குலம்உயிர் உக்கு உக, அசனிக் குரல் அடு
                           போர்
உரவுக் கருடனும் உட்கிட, உயிர்க்கின்றன-ஒருபால்.

     பல ஒலிகள்உண்டாகின்றன. பணிலம் - சங்கு. பணை - முரசம்,
அசனி- இடி. உயிர்த்தல் - ஒலித்தல்.                        (74-1)