388.

வானோர் பசுந் தருவின் மா மலர்கள் தூவ,
ஏனோரும் நின்று,'சயம் உண்டு' என இயம்ப,
தான் ஓர் பெருங்கருடன் என்ன, எதிர் தாவிப்
போனான்,விரைந்து, கடிதே போகும் எல்லை.

     பசுந்தரு -கற்பகம்.                                   (74-2)