389.

என்று தன் இதயத்து உன்னி, எறுழ் வலித் தடந்
                              தோள் வீரன்
நின்றனன், நெடியவெற்பின்; நினைப்ப அரும்
                              இலங்கை மூதூர்

ஒன்றிய வடிவம்கண்டு, ஆங்கு, உளத்திடைப்
                        பொறுக்கல் ஆற்றான்;
குன்று உறழ்புயத்து மேலோன் பின்னரும்
                         குறிக்கலுற்றான்.

     எறுழ் - மிக்க. வீரன்- அனுமன், வெற்பு - மகேந்திரமலை   (94-1)