392.

ஆயவன்அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள்,
                                 'முன் நாள்
மாய மா நகரம்தன்னை வகுத்து, அயன் என்னும்
                                 மேலாம்

தூயவன் என்னைநோக்கி, "சுந்தரி ! காப்பாய்"
                             என்று, ஆங்கு,
ஏயினன், இதற்குநாமம் இலங்கை என்று எவரும்
                             போற்ற.

     அந்தரி -இலங்கைமாதேவி                              (93-1)