401.

தரும நீதிதழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன்தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக்கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனதுஆவி பெற்று உய்ந்துளாள்.

     வீடணன் மகள் திரிசடைதேற்றப்பிராட்டி உய்ந்தாள்.        (29-2)