'செம் மலர்த் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார், வெம்மை உற்றுஉன்மேல் வீழ்வார், வெள்கியே நகை செய்து ஓத, தம் மனத்து ஆசைவேறோர் தலைமகற்கு உடையாள் தன்னை அம்மலற்றுஇறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே.
நகை செய்து -இகழ்ந்து. இறைஞ்சும் வேட்கைதான் உள்ளதே அன்றிவேறு பயன் இல்லை என்பதாம். (149-3)