414.

தீயோர்செய்கைதானும், இராமன் ஒரு தேவித்
தாயாள் துன்பும்,மாருதி கண்டே தளர்வு எய்தி,
மாயாது ஒன்றேஅன்றி, மனத்தே மலி துன்பத்து
ஓயாது உன்னிச்சோர்பவன் ஒன்று அங்கு
                            உணர்வுற்றான்.

     தாயாள் - சீதை.மனத்தே மிக்க துன்பத்தால், சலியாது கருதிச்
சோர்பவன் ஆயினன் அனுமன்.                             (159-1)