4. உருக் காட்டுபடலம்
சுற்றிய கொடி ஒன்றைத் துணிந்து, தூயள், ஓர் பொன் தடங்கொம்பினில் பூட்டி, 'பூமியே ! நல் தவம்உடையள் யான்ஆகின், நாயகன் வெற்றி சேர்திருவடி மேவுவேன்' என்றாள்.
ஒரு கொடியை வெட்டிக்கொம்பில் பூட்டித் தற்கொலைக்குமுயற்சித்தாள் பிராட்டி. (21-1)