419.

நோக்கினேன்; அரக்கியர், நுனிப்பு இல் கோடியர்
நீக்கினர்துயிலினை; நின்னைக் காணுதற்கு
ஆக்கிய காலம்பார்த்து, அயல் மறைந்து, பின்
தாக்கு அணங்குஅவர் துயில் கண்டு, சார்ந்துளேன்.

     நுனிப்பு - கணக்கு.தாக்கு அணங்கு அவர் - தீண்டி வருத்தும்
தெய்வம்போன்றலர் அரக்கியர்.                            (23-1)