422.

தவம் தந்தநெஞ்சின் தனது ஆர் உயிர்த்
                            தம்பியோடும்
நவம் தந்தகுன்றும், கொடுங் கானமும், நாடி ஏகி,
கவந்தன்தனது ஆவிகவர்ந்து, ஒரு காலும் நீங்காச்
சிவம் தந்து,மெய்ம்மைச் சபரிக்குத் தீர்ந்து வந்தான்.

     கவந்தனுக்கு சிவம்தந்தான் - சிவம் - மங்கலம். தீர்ந்து வந்தான் -
முடிபாகி வந்தான் என்று சாம்யப் பொருள் உரைக்கலாம்.           (88-1)