423.

'சென்றேன்அடியேன், உனது இன்னல் சிறிதே
                   உணர்த்தும் அத்துணையும்
அன்றே, அரக்கர்வருக்கம் உடன் அடைவது;
                  அல்லாது, அரியின் கை
மன்றே கமழும்தொடை அன்றே, நிருதர் குழுவும்
                    மாநகரும்
என்றே இறைஞ்சி,பின்னரும், ஒன்று இசைப்பான்
                   உணர்ந்தான் ஈறு இல்லான்.

     அனுமன், நான்இராமன்பால் சென்று தெரிவிக்கும் அளவுதான்
தாழ்த்தது. தெரிவித்தவுடன் அரக்கரும் இலங்கையும் 'குரங்கின் கைப் பூமாலை
போல்' ஆகிவிடும் என்று பிராட்டியை வணங்கி, பிறகும் ஒன்று சொல்ல
மனத்தில் உணர்ந்தான் ஈறு இல்லான் - அனுமன். சிரஞ்சீவி என்னும் பொருள்.
                                                       (117-1)