426.

"கொற்றவன்சரத்தினால் குலைகுலைந்து உக,
இற்றது இவ்இலங்கை" என்று, இரங்கி ஏங்கவே,
மற்று ஒரு மயன்மகள் வயிறு அலைத்து உக,
பொற்றொடி ! நீயும் கண்டு, இரங்கப் போதியால்

     அனுமன் சீதையைத்தேற்றியது, கொற்றவன் - இராமன். பொற்றொடி -
சீதை. மண்டோதரி வயிற்றில் அடித்து அழ அதுகண்டு சீதை வருந்துவாள்
என்பதாம்.                                                (65-1)