429. | "ஐய நின்சரணம் சரண் !" என்று, அவன் அஞ்சி, வையம் வந்துவணங்கிட, வள்ளல் மகிழ்ந்தே, "வெய்யவன் கண்இரண்டொடு போக !" என, விட்ட தெய்வ வெம் படைஉற்றுள தன்மை தெரிப்பாய். |
அவன் - சயந்தன்.வள்ளல் - இராமன் "கண் இரண்டொடு போக" சயந்தன் ஆகிய காகத்துக்கு இரண்டு கண்களை மட்டும் போக்கியது, ஆகும். தெய்வ வெம் படை - "அயல் கல் எழு புல்லால் வேக வெம்படை" என்று (5421) முன்பு கூறப்பட்டது. (77-3) |