எனப் பதம்வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை கேளா, கனக் குரல் உருமுவீழ, கனமலை சிதற, தேவர் மனத்து அறிவுஅழிந்து சோர, மாக் கடல் இரைப்புத் தீர, சினத்து வாய்மடித்து, தீயோன், நகைத்து, இவை செப்பலுற்றான்.
அனுமனால் சோலைஅழிந்தது கேட்ட இராவணன் சீறிய படி இதில் சொல்லப் பெறுகிறது. தீயோன் -இராவணன். (57-1)